மழை/நாகேந்திர பாரதி



ஊசி குத்திக் குத்திப்
புண்ணான வீதிக்கு

வலித்து விடக்
கூடாதென்று

வீட்டுக்குள்
இருந்து விட்டேன்