உண்மை/ ஆர் வத்ஸலா

மழை அழுதது
சற்றே அதிகமாக
என் ஜன்னல் அருகே

ஏன் அழுகிறாய்
உன் காதலன்
வரவில்லை என்றா?
எனக் கேட்டேன்

அடி பைத்தியமே,
என்னவன் சற்று நேரத்தில்
வந்து விடுவான்.
நான் அழுவது உனக்காக
உன்னவன் போய்
மாதக் கணக்காயிற்றே
என்றாள்

உடம்பெல்லாம் எரிய
வம்புக்காரி!
நீ கண்டாயோ!
நீ வராத போது
அவன் வந்தானடி
எனக் கூறி
ஜன்னலை படாரென
சாத்தினேன்

1/11/22
காலை 10 மணி