மழை/பி. ஆர். கிரிஜா

கார் முகில் களியூட்ட
வண்ண மயில் சதிராட
கானக் குயில்
இசை பாட
புள்ளிமான் துள்ளியோட
ஆட்டு மந்தை
அசைந்தாட
களிறு கூட்டம்
பிளிறிட
ஓடை நீர்
வழிந்தோட
வண்டினங்கள்
ரீங்காரமிட
புள்ளினங்கள்
கூத்தாட
இவையனைத்தும்
மாரி பொழிந்திடாதா
என ஆவலுடன்
காத்திட
நானும்தான்
காத்திருக்கேன்
அந்திமழை
பொழியுமென !