வேதனையில் வளமை/வளவ. துரையன்

ஒரு கையில் சாப்பாட்டுக் கூடையுடன்
தோளில் புத்தகச் சுமையுடன்
போகும் சிறுவனை
குடை பிடித்துப் போகும்படி மழை தொல்லைப்படுத்துகிறது.

நடைபாதைக் கடைகளில் விரித்துவைத்தப் பொருள்களுக்கு மேல்
அவசர அவசரமாகப் போர்வை போட்டுத்
தூங்கவைக்கிறார்கள்.

படுத்துக் கிடக்க வேதனையுடன்பூட்டியிருக்கும்
கடை தேடுகிறது தெருநாய்.

எதைப்பற்றியும் கவலைப் படாத எருமை மழையில் நனைவேன் என்று அடம் பிடிக்கிறது.

நேற்றுக் கதிர் பிடித்த பயிருக்கு இது நல்லது என மகிழ்கிறான் மாரிசாமி