
தங்க முலாம் பூசிய
தேநீர் கோப்பையோடு …
என் இதழ் வழியே
உறிந்து கொண்டே
ரசித்துக் கொண்டிருக்கும்
மழைப் பற்றித்தான்
கவிதைகேட்கிறாய் ….
கவிதையாய்
கரைந்து கொண்டிருப்பதை
எப்படி தருவதென்று ?
மழையும் நானும் உரையாடிக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றுசெய்
சாளரம் திற
கரம் நீட்டு.
ஒருபடி கவிதை கொட்டும்
இப்போது
நீயும் கரைந்து கொண்டிருப்பாய்
