
தேங்கிநிற்கும் மழைநீரில்
தெரியுது அவன் முகம்….
இன்னொரு மழைக்கு
ஆயுத்தமாகிறது வானம்….
தோழமையற்ற வெறுமையில்
மழைநீரை எத்தத் தோன்றவில்லை…
வீடுவெள்ளத்தில் போனதால்
அவனுக்கு மழையிடம் விருப்பமில்லை.
அவனுக்கு பிரியமான நாய்க்குட்டி
ஒரு மழைநாளில் தான் தொலைந்துபோனது.
வீடற்றவெளியில் பெய்கின்ற
மழையில் தினமும் நனையப்பிடிக்கவில்லை….
மழைக்கு தெரியாது அவனது மனது.
♦
