இன்று பெய்த மழை /கோ.முத்துசுவாமி

ஐதராபாத்தின்
குளிர் கால சுகத்தை
கெடுத்தது
இன்று பெய்த மழை!

“இப்போது ஏன் வந்தாய்?”
எனக் கேட்டேன்!
“சென்னையில் கொட்டும்
என் அக்கா
துரத்தி விட்டாள் இங்கே!” என்றது!

“உன்னை அமுதம் என்று
வர்ணித்து மகிழ்ந்தேன்;
விஷமம் செய்து விஷம் எனப்
பெயர் எடுக்காதே” என்றேன்!

இப்போது தான்
கொஞ்சமாய் கலைந்து
கொண்டிருக்கிறது
மேகம்!