இது கழுதைகளாலான
உலகு/கேள்விக்காரன்…

கவிதைகளால் ஆன
உலகு
எனச் சொல்ல விழைந்து
பிழையாக சொல் விழுந்தது..

கவிஞர்கள் எனை
விரட்ட…

கழுதைகள் கூடி
காப்பாற்றி மீட்டன.

அடைபட்ட
சொல் பட்டியில்
நானும் கவிதையும்
மட்டும்.

கழுதை அடைத்த
பட்டி என
உரிமையாளன்
பட்டா சிட்டா காட்டினான்

ஆஹா கவிக்கூடம்
என நான் ஆர்ப்பரித்த
கணத்தில்

உளப்பிறழ்வு பிரிவில்
உயர்ந்த மாட மருத்துவமனையில்
உள் அனுமதி நோயாளியாய்.

பக்கமொரு
கழுதை முகன்
கையில் கவிதை புத்தகத்துடன்..

உனக்கு முன்னே
இங்கு வந்தேன்
இன்று எனக்கு விடுதலை என்றான்

வெளியில் எவருக்கேனும் சேதி
என்றான்.

“நாம்” இறந்தோம்
சொல் என்றேன்

ஆயுளுக்கும் இரு
என ஆசீர்வதித்து
புத்தகம் கைமாற்றி
புதியனாய் விலகினான்
அவன்.

எவர் நல நல்லார்

கழுதை முகன்
கவிதை முகன்