காலங்கள்/க.யாஸ்மின் சல்மா

பழுத்திட்ட இலைகளெல்லாம்
அவை உதிர்ந்து சருகாகும்
சருகான இலைகளெல்லாம்
உரமாகி உயிர்கொடுக்கும்
உயிர் பெற்ற அம்மரமோ
தளிர் தாங்கி தழைத்து நிற்கும்
தழைத்து நிற்கும் தளிர்களெல்லாம்
இலையாகிச் செழித்து நிற்கும்
செழித்து நிற்கும் இலைகளெல்லாம்
வண்ணம் கூட்டி வலுவிழக்கும்
வலுவிழக்கும் இலைகள் மீண்டும்
அவை உதிர்ந்து சருகாகும்
இழப்போடு நில்லாமல்
வசந்தமும் வந்துவிடும்
இது ஒரு காலத்தின் சுழற்சி!
வாழ்வின் இழப்புகள் என்றும்
நம் நினைவாகும்
புதிதாய் இணைவது எளிதாய்
இயல்பாகும்
இது இயற்கை உணர்த்தும்- நம்
வாழ்க்கைக்கான பயிற்சி!