
இடுப்பில்
ஏறி உட்கார்ந்துகொண்டு இறங்கமாட்டேன்
என்று அடம்பிடிக்கும் குழந்தையாக சிணுங்கிக் கொண்டிருக்கிறது
இந்த மழை.
துளி மிரட்டினாலும் உரத்துக் கூக்குரலிடும் குழந்தையாக
இடி ஒலித்துப் பயமுறுத்துகிறது.
இறக்கி விட்டுவிட்டு வெளியே செல்லலாம் என்று பார்த்தால் நிற்க மறுக்கும் இரண்டின் பிடிவாதமும் தாங்க
முடியவில்லை.
அழைக்கும்போது வராத குழவிபோலத்தான்
நடவுநட்டவன் வேண்டும்போது வராது மாரியும்.
சிலநேரங்களில் இரண்டையும் வேண்டி ஆலயங்களில் பூசைகள், அருச்சனைகள்
எப்படி இருப்பினும் இரண்டையும் பார்த்து ரசிப்பது கவிஞனின் மனம் மட்டுமே
