
டெல்லியில் யார் வீட்டில்
குழந்தை பிறந்தாலும்
ஒரு பத்து அலிகள்
வந்து குதித்துப் பாடி விட்டுக்
காசு கேட்பார்கள்.
நல்ல பழக்கம் – இந்த
வடநாட்டுப் பண்பாடு
எனக்குப் பிடித்திருக்கிறது.
பிள்ளை உற்பத்தி செய்ய
முடியாதவர்கள் பிள்ளை
பிறந்தது கேட்டுக் குதூகலிப்பது
நல்ல பழக்கம் என்றுதான்
எனக்குத் தோன்றுகிறது
வடநாட்டு அலிகள் பற்றியும்
அவர்களுடைய பொய் முலைகளைப் பற்றியும்
எழுதிய கவிஞர் இளங்கோ அடிகள்
அவர்களுடைய இந்தப் பழக்கம் பற்றி
எழுதவில்லையே என்று
எனக்கு வருத்தம்தான்.
ஆனாலும் உலகமே அலிகளாகிவிட்டால்
யார் வீட்டில் குழந்தை பிறக்கும்
யார் வீட்டில் அவர்கள்
குதித்துப் பாடிக் காசு
கேட்பார்கள் என்று
நான் யோசித்துப் பார்க்கிறேன்
எனக்கு விடை கிடைக்கவில்லை.
