நத்தை/க நா சு

நத்தை ஒன்று கொணர்ந்து
என்னிடம் தந்தார்கள்.
அதற்குள்ளே பாடுகிறது.
எல்லையுள்ள ஒரு கடல்.
என் உள்ளத்திலே
நீர் நிரம்புகிறது.
அதிலே நிழலும் ஒளியுமாகச்
சிறு மீன்கள் நீந்துகின்றன.
என்னிடம் நத்தை ஒன்று
கொணர்ந்து தந்தார்கள்.

One Comment on “நத்தை/க நா சு”

Comments are closed.