
அட ! என்ன மழை !
அடித்துப் பெய்கிறதே எனப் பார்த்தால்
அடுத்த தெருவில் மழையே இல்லை;
திரும்ப மீள்வதற்குள்
என் சாளரத்தில் சூரியக் கதிர்கள்;
அப்படியா ! என்பதற்குள்
அடுத்து வரும் கரு மேகம்.
கால்கள் மழை நீரில்
தலையில் சுடு வெய்யில்;
விண்ணுக்கும் மண்ணுக்கும்
கண்ணாமூச்சி விளையாட்டா ?
இது என்ன பருவ மழை ?
குறும்பைப் பார்த்தால்-
மழலைப் பருவ மழையோ ! இதென்ன கூத்து ?
மழைக்கென்று விரித்த குடை வலையில் சூரியன் வந்து விழுகிறது
