கால நிழல்/ந.பானுமதி


அங்கே பார் முதலை என்றாள்
திடுக்கிட கை கொட்டி சிரித்தாள்.
பயந்தாயா, இப்போது பார் யானை என்றாள்.
யானைக்கும் முதலைக்கும் ஒரே நேரம் முக்தி அவள் பேச்சில்
விரியத் திறந்த கண்களில், மடித்து கட்டிய பின்னலில் இவளை போல நான் இருந்த காலம் நிழலாட நெருஞ்சியாக ஒற்றைப் பூ.
இவள் மகள் இவளுக்கு காட்டும் வரை
நீலவானின் மேகக் கோலங்களை வரும் வருடங்களில் இவள் பார்ப்பாளா?