
காலனே அண்டாமல்
காக்கும் மருந்து தாருமெனக்
கருக்கலில் ஒருவன்
கவலையுடன் கேட்க…
கட கடவெனக்
கணீர் குரலில்
கவுண்டமணி வைத்தியர்
கருத்துடன் சொல்கிறார்…
“கருங்கல் வேர் 2 கிலோ,
கருவாட்டு ரத்தம் ஒரு படி,
கடிக்காத கொசுவின் சிறுநீர் காற்படி…
கணக்காகக் கொண்டு வா…
கசாயம் காய்ச்சித் தருகிறேன்
கண் மூடிக் குடி, ஒரு மண்டலம்…
காலன் உன்னைக்
கண்டதும் தெறித்தோடுவான்!!!”
கட்செவியில் காணொளி கண்டு
கலகலவெனச் சிரித்துணர்ந்தேன்…
கவலை மறக்கும் சிரிப்புதான்
காலனை வெல்லும் அருமருந்தென!!!
