இனிக்கும் தமிழ்- 155/டி வி ராதாகிருஷ்ணன்

திருவாசகம்

நமக்கு என்ன வேண்டும் என்று. அவன் பார்த்து செய்யட்டும் என்று வேண்டுதல்
ஏதுமின்றி அனைத்தையும் அவனிடமே விட்டு விட்டார் மணி வாசகர்…

பாடல்

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.

பொருள்

வேண்டத் தக்க தறிவோய்நீ – எது வேண்டுவதற்கு உரியதோ, அதை நீ அறிவாய்.
வேண்ட முழுதுந் தருவோய்நீ – எதை வேண்டினாலும் அதை முழுமையாகத் தருவாய்
வேண்டும் -வேண்டுகின்றஅயன்மாற் கரியோய்நீ -. விரும்புகின்ற பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் நீ அரியவன்.
வேண்டி – நீயே விரும்பி
என்னைப் பணிகொண்டாய் – என்னை உன் பணியாளனாக ஏற்றுக் கொண்டாய் வேண்டி – விரும்பி
நீயா தருள்செய்தாய் யானும்- நீ எனக்கு என்ன அருள் செய்தாலும்
அதுவே வேண்டின்அல்லால் – அதுவே நானும் வேண்டினேன், அல்லாமல்
வேண்டும் – நான் வேண்டும்
பரிசொன் றுண்டென்னில் -பரிசு என்று ஒன்று இருந்தால்
அதுவும் உன்றன் விருப்பன்றே.- அதுவும் உன்னோட விருப்பம். (எனக்குன்னு ஒரு விருப்பமும் கிடையாது.)