மீசை டீச்சர் /அனங்கன்

நடைபாதையில் தவிர்க்கஇயலாத
சூழ்நிலையில் நேருக்கு நேராய்
மீசை டீச்சரைப்பார்த்தேன்….

வயதானாலும் நல்ல மஞ்சள் பூசிய முகத்தில் “அது” அப்படியேதான் இருந்தது.

காலமாற்றத்தில் பல்வேறு மாணவர்கள் கடந்துபோகும் நிலையில் அவர் என்னை
நினைவைத்திருக்கப் போவதில்லை….
என்றாலும் வணக்கம் சொன்னேன்.

பொதுவாய்க்கேட்பதுபோல் நல்லாயிருக்கியாப்பா…நினைவுக்கு
வரமாட்டேங்குது என்றார் தயங்கிய
குரலில்….

கதிரேசன் டீச்சர்…பிளஸ் ஒன்னில்
பாதியிலே நின்னுட்டேன்…

ஓ !என்படம் போட்டு மீசைபோட்டியே …அந்தப்பையனா..இப்ப என்ன செய்யுரே….?

ஏர்போர்ஸ்சுல இருக்கேன் ….டீச்சர்.

நல்லாரு…நல்லாரு…கடந்துபோனவரின் கூனல் முதுகு நடை என்னவோ செய்தது.

வாழ்க்கை சிலபாடங்களை காலங்கடந்துதான் கற்பிக்கிறது.


♦.

One Comment on “மீசை டீச்சர் /அனங்கன்”

Comments are closed.