
கண்ணன் சொன்னான் :
நம்பாதே எதையும்
எதிர்பார்க்காதே!
எதிர்பார்க்காதவன்
ஏமாறமாட்டான்
முடிவுகள் முக்கியமல்ல
உன் செயலே முடிவு
செய்து
அச்செயலின் முடிவு
சில்லறையானதோர் வடிவமாகக்
காணும்போது ஏற்படும்
ஏமாற்றம்
சாவேயாகும்
சிந்திக்காதிருப்பதும் நல்லது
சிந்தனையற்ற செய்கை
என்மேல் ஏற்றி வைத்த
செய்கை
தாயின் கர்ப்பப்பையிலே
சிசு உறங்கிக்
கிடப்பது போல
உன்னைக் கிடக்கச் செய்யும்
செய்கை
மேலே இன்னதென்று
நானே
நானே
அறியாதபோது
ருத்திரனை அழைக்கிறேன்
ருத்திரன்
என் நண்பன்
என் நண்பனுக்குச்
செய்வதின்னது
என்று தெரியும்.
ஆனால்
உலகத்தின் முடிவும்
முக்கியமான விஷயம் அல்ல.
ருத்திரனுக்குத் தெரியும்
உலகத்தின் முடிவும்
சில்லறையானதோர் விஷயம்தான் என்று.
சில்லறைகள்
எத்தனை சேர்ந்தாலும்
ஒரு கோடி
யாகாது.

எனக்கு மிகவும் பிடித்த கொள்கை
எதிர் பார்க்காதே- ஏமாறாதே
சொல் எளிது
செயல் ஊஹூம்