பிறந்த நாளில்
நினைவு நாளில்
மட்டுமல்ல…
ஒவ்வொரு நாளும்
உங்கள் நினைவு
எப்படியோ வருகிறது.
ஒவ்வொரு முறை உங்களை
நினைக்கும்போதும்
பிறக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறை
உங்கள் நூலைத்
திறக்கும்போதும்
பிறக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறை
எழுதும்போதும்
எனக்குள் உருவமின்றிப் பிறக்கிறீர்கள்.
உங்கள் கனிவான குரலைக்
கனவுகளில் உணரும் காலமற்ற பொழுதுகளில்
காலமற்ற வெளிகளில் பிறக்கிறீர்கள்.
நீங்கள் தொலைவில் சென்ற பின்தான்
உங்கள் அருகாமையை உண்மையில் உணர்கிறேன்.
காலத்தில் கலந்துவிட்டீர்கள் நீங்கள்
காலத்தைக் கடந்து
தடம் பதித்து வருகிறது
உங்கள் எழுத்து.
கவிக்கு அப்துல் ரஹ்மான்
*
அவர்களின் பிறந்த நாளில்
அவர் நினைவுகளைப் போற்றுகிறேன்.

