குடை வீடு/ ஆர் வத்ஸலா

மழையை சந்திக்கும் போதெல்லாம்
நினைவு வருகிறது-
நனைந்ததால்
அம்மாவிடம் வாங்கிய அடிகள்
மறக்காத நாட்களில்-
வீட்டினுள் விரித்த குடையடியில்
சொப்பு வைத்து
‘வீடு’ விளையாட்டு விளையாடியது
வளர்ந்த பின்
கல் வீடொன்று
நம்மை பிரிக்கும் எப்போதைக்குமாக என்றறியாமல்