
ஒரு வழியாக வாசுதேவன் அந்தப் பங்களாவில் தனியாக இருக்க தீர்மானித்தார்.
இரவு வரும் போதுதான் பயம் சூழ்ந்து கொண்டது.
முதல் நாள் எல்லா அறைகளிலும் விளக்கைப் போட்டுவிட்டுத்தான் தூங்கினார்.
பயம் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் போனவுடன் எல்லா அறைகளிலும் விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கப் போவார்.
ஆனால் இரவு ஒரு மணி ஆனவுடன் அவர் விழித்து விடுவார். அதன்பின் அவர் தூங்குவது இல்லை.
அந்த பங்களாவின் உரிமையாளர் அவர் மனைவி சரியாக ஒரு மணிக்குத்தான் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தாள் என்று குறிப்பிட்டிருக்கார்
