
சில கதைகள் கவிதைகளைப் படிக்கும் போது, அற்புதமாக உருவாக்கப்பட்டு வந்த அந்தப் படைப்பு, அதன் இறுதிப்பகுதியில், படைப்பாளியின் கவனக் குறைவால் ஏற்படும்
சறுக்கலால் அந்தப் படைப்புக்கே ஊறு நேர்வதைக கண்டு வருந்தியிருகிறேன். கம்பனைப் பற்றிய கதையில், அவன குலோத்துங்கனால் மனம் புண்படுத்தப்பட்டுச்
சினத்துடன் அரசவையை விட்டு வெளியேறுகிறான். அப்போது கம்பன் சொன்னதாக வரும் பாட்டு இது:
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன்-என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு.
ஒரு பெருங்கவிஞன் அமைப்பு (Establishment) ஒன்றிலிருந்து கம்பீரமாக வெளியே வருகிறான்
அவனுடைய கம்பீரத்தை முதல மூன்று வரிகளும் அற்புதமாகக் காட்டுகினறன. ஆனால் ஈற்றடியும். அதில் வரும் உவமையும் அந்தக் கம்பீரத்துக்குச சற்றும் பொருந்தாதவையாகக்
கிடக்கின்றன. அற்புதமாக வந்து கொண்டிருந்த கவிதை ஈற்றடியால் தடாலென்று
கீழிறங்கி விடுகிறது. இது போன்ற சமயங்களில் நமக்கு ஏற்படும் வருத்தம் கொஞ்ச நஞ்சமில்லை. இத்தகைய வருத்தமும் ஆதங்கமும் தூண்ட ஓர் எண்ணம் எழுந்தது.
ஈற்றடி இப்படியிருந்தால் எப்படி இருக்கும்
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன்-என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
அரிமாவை ஏற்கா அளை
(அரிமா – சிங்கம் , அளை- குகை)
– .
