பார்வை/வ.வே.சு

எண்ணெய் தெரிகிறது
திரி தெரிகிறது
விளக்கு தெரிகிறது;

ஏற்றிய பிறகு –

எண்ணெய் தெரியவில்லை
திரி தெரியவில்லை
விளக்கு தெரியவில்லை
சுடர் ஒன்றே தெரிகிறது.


09/11/2021

One Comment on “பார்வை/வ.வே.சு”

Comments are closed.