அது பலிக்கிறது/ராபியா

தமிழில் : க.மோகனரங்கன்


யாராவது
தவறான பெயர்கொண்டு
உங்களை அழைத்தால்
நீங்கள் வருவீர்களா என்ன ?
அழுதேன் நான் , ஏனெனில்
ஆண்டுகள் பலவாக
அவர் எனது அணைப்பிற்கு ஆட்படவேயில்லை .
ஒரிரவு எனக்கொரு இரகசியம் அருளப்பட்டது ;
ஒருவேளை கடவுளை நீ அழைக்கும் பெயர்
அவருடைய அசலான பெயராக அல்லாது ,
அவருடைய பிறிதொரு பெயராக இருக்கலாம் .
நான் அதைக் குறித்து தீரயோசித்து ,
எனது நேசருக்கு உகந்தவொரு செல்லப் பெயரோடு வந்தேன்.
அதை பிறரிடம்
நான் பகிரப் போவதில்லை ;
என்னால் சொல்ல
முடிந்ததெல்லாம் இதுதான் ,
அது பலிக்கிறது.