பென்சிலெடுத்து
சார்ட் பேப்பரில்
செடி வரையத் தொடங்கினாள்
அசோகா.
கிளைகள் வரையத்
தொடங்கி
இலைகளிட்டாள்
கொப்பு வரைந்தாள்.
அசதியில்
பள்ளிக்கூட புத்தகம் பை மீதே
தூங்கி விட்டாள்.
முற்றத்தில் போய்
புத்தகப் பை எடுக்கச் சென்றவளுக்கு
ஆச்சர்யம்
கிளையின் கொம்பில்
ஒரு பறவை
எச்சம் இட்டுச்சென்றிருந்தது.
இப்போது முற்றமெங்கும்
பறவைகள்.

