
அழகியசிங்கர்
உங்களிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன்
நீங்கள் கவிதை எழுதுபவரா?
உங்களுக்காக
பச்சாதபப்படுகிறேன்
நீங்கள் என்னமோ நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள் எழுதுவதுதான் கவிதை என்று.
உண்மையில் அப்படி இல்லை
நீங்கள் மட்டுமல்ல பலரும்
கவிதைகள் என்ற பெயரில் எழுதுவதெல்லாம்
கவிதை இல்லை
அப்படியென்றால்
எது கவிதை
அது உங்களுக்கும் தெரியாது
இதை எழுதும்
எனக்கும் தெரியாது
ஆனால்
நீங்கள் எழுதிக்கொண்டே போங்கள்
நீங்கள் எழுதுவதெல்லாம் கவிதையில்லை
என்ற நினைப்போடு
எழுதிக்கொண்டு போங்கள்
ஒரு தருணத்தில்
தானாகவே கவிதை வந்து விடும்
அப்போது
நீங்கள் சொல்ல மாட்டீர்கள்
மற்றவர்கள்தான் சொல்வார்கள் நீங்கள்தான் கவிதை
எழுதுகிறீர்களென்று
என்ன சரியா?

ரொம்ப சரி. நீங்கள், வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமே அலாதிதான்.
மிகவும் யதார்த்தமான கவிதை