ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 26

22.10.2021 – வெள்ளி


ஆசிரியர் பக்கம்


அழகியசிங்கர்


அழகியசிங்கர் : நான் முக்கியமாக சில நூல்களை வைத்திருக்கிறேன்.

மோகினி : என்ன

அழகியசிங்கர் :  1. இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 2. சிவானந்த நடனம் – டாக்டர் ஆனந்த குமாரசுவாமி 3. வெ.சாமிநாதனார் எழுதிய ஹிட்லர்.

ஜெகன் : எல்லாப் புத்தகங்களையும் எந்தப் பதிப்பகம் கொண்டு வந்திருக்கிறது.

அழகியசிங்கர் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.

மோகினி : சிறப்பு. எந்தப் புத்தகத்தை முதலில் படிப்பீர்கள்.

அழகியசிங்கர் :  ஹிட்லர்

ஜெகன் : அநுத்தமா, அ.முத்துலிங்கம் கூட்டம் நாளைக்குத்தானே?

அழகியசிங்கர் : ஆமாம்.

மோகினி : நான்கு நான்கு கதைகள் வீதம் எட்டுக் கதைகள்.

ஜெகன் : இது 22வது கூட்டம். இதுவரை 36 கதைஞர்களைக் குறித்துப் பேசியாயிற்று.

மோகினி : திரும்பத் திரும்ப சில பேர்களை மட்டும் கதைகள் பேசக் கூப்பிடுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறதே?

அழகியசிங்கர் :  உண்மையில் கதைகளைச் சரியானபடி புரிந்துகொண்டு பேசுபவர்கள் சிலர் மட்டும் இருக்கிறார்கள்.  சிலர் ஆர்வத்தில் கலந்துகொண்டாலும் பேசத் தடுமாறுகிறார்கள்.  பெரிய வட்டம் இல்லை இது.  முகநூல் மூலம் யாரைக் கூப்பிட்டாலும் பேச வருபவர்கள் சில பேர்கள்தான்.

மோகினி : அவ்வளவு சுலபமில்லை.

ஜெகன் : நீங்கள் தேர்ந்தெடுத்த இரண்டு சிறுகதை ஆசிரியர்களும் சிறந்தவர்கள்.  அநுத்தமா அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 100வது ஆண்டை நிறைவு செய்கிறார்.  300 கதைகள் எழுதியிருக்கிறார். அ.முத்துலிங்கம் என்ற எழுத்தாளரும் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதியிருப்பார்.  சாதனை புரிந்திருக்கிறார்.

அழகியசிங்கர் : பேசக் கூடியவர்களில் 3 பேர்களில் அ.முத்துலிங்கத்தின் தீவிர வாசகர்கள். அவர்கள் எழுதவும் செய்வார்கள்.

மோகினி : நாளைக்கு அணி திரள்வோம்.

ஜெகன் :  இன்றைய சொற்பொழிவை முடித்துக்கொள்வோம். அழகியசிங்கர் : ஆமாம்.