மைக்ரோ கதை

எஸ்.அருள்மொழி சசிகுமா ர்


ஒரு பேச்சாளர் பேச வேண்டிய இடத்துக்குப் போகும்போது வழியில் பஞ்சர் ஆகி விட, குறுக்கு வழியில் சிறிது காம் நடந்து செல்லலாம் என்று நடக்கத் தொடங்கினார். நிறைய மரங்களும் செடிகளும் காடு போல இருந்த அந்த இடத்தை அவர் கடக்கும்போது. பக்கத்துக்காட்டில் இருந்து வழி கவறி வ ஒரு சிங்கம் அவர் பாதையில் தென்பட்டது. அதிலிருந்து தப்பிக்கலாம் என்று சற்று பாதை மாறி நடந்தாலும் சிங்கம் அவரை விடவில்லை .

“நான் ரெண்டு நாளா பட்டினியா இருக்கேன்” என்றது சிங்கம்.

உடனே பேச்சாளர், ” நான் உன்னைக் கொஞ்ச நேரம் புகழ்ந்து பேசறேன். அதுக்குப் பிறகு என்னை சாப்பிட்டுக் கொள்” என்றார். சிங்கமும் ஒத்துக் கொண்டது.

பேச்சாளர், ‘காட்டுக்கு ராஜா சிங்கம், மகா பலசாலி, புத்திசாலி நீ வாழ்க என்று 2 மணி நேரத்துக்கும் மேலாக சிங்கத்தைப் புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத் தில் சிங்கம் மயங்கிவிட்டது.  அந்த நேரத்தில் அவர் சிங்கத்திடம் இருந்து தப்பித்து, ஓட்டம் பிடித்தார்.

சிறிது நேரம் கழித்து தலைதூக்கிப் பார்த்த சிங்கம், ‘அப்பாடா மயக்கம் வந்தது போல் நடிச்சேன். இல்லேன்னா இந்த ஆள் என்னை பேசியே கொன்னுருப்பான்’ என்று நினைத்துக் கொண்டது.
,
(நன்றி : தினமணி கதிர் 10.10.2021)

One Comment on “”

Comments are closed.