இனிக்கும் தமிழ் – 15


  டி வி ராதாகிருஷ்ணன்

ஸ்ரீராமரின் அழகை கம்பன் விமரிசிப்பதைக் காணுங்கள்..ரசியுங்கள்

தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்னதாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதேவாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரைஒத்தார்.

பொருள்:

தோள்கண்டார் = இராமனின் தோள்களை கண்டவர்கள்தோளே கண்டார் = அந்த தோளை மட்டும் தாம் பார்க்க முடியும். அதை விட்டு
அவர்கள் கண்களை எடுக்க முடியாது, அவ்வளவு அழகுதொடுகழல் = கழல் எப்போதும் தொட்டு கொண்டிருக்கும்

கமலம் அன்ன = தாமரை போன்ற

தாளே கண்டார்=அந்த திருவடிகளை மட்டுமே கண்டார்

தடக்கை கண்டாரும் = கையை கண்டவரும்

அஃதே= அதே போல் கையை மட்டும் கண்டனர்.

வாள்கொண்ட=வாள் போன்ற கூரிய

கண்ணார் = கண்களை உடைய பெண்கள்

யாரே வடிவினை முடியக் கண்டார் = யாருமே அவன் முழு அழகையும் காணவில்லை

ஊழ்கொண்ட = எப்போது தோன்றியது என்று அறியா காலம் தொட்டு உள்ள

சமயத்து அன்னான் = மதங்களில் உள்ள கடவுளின்

உருவுகண் டாரை ஒத்தார்.   = உருவத்தை கண்டவர்களை போல அந்த பெண்கள் இருந்தார்கள்

எப்படி கடவுளை முழுமையாக கண்டு கொள்ள முடியாது. அது போல இராமனின்அழகையும் முழுமையாக கண்டு உணர முடியாதாம்….

கம்பனிடம் தமிழ்  விளையாட்டை ரசித்தீர்களா?

   

ReplyForward