
குழந்தைகளின் உலகம்
மிகப்பெரியது தான் …
அதனை ரசனையோடு
கொண்டாடுகையில்
ரசனையும் நம்மை ரசிக்கும்!
சின்ன சின்ன
கைத்தட்டலுக்காகவும்
பாராட்டிற்காகவும்
ஏங்கித்தவிக்கிறது
குழந்தைகள் உலகம் …
உங்கள் கனவுகளை
சுகமென அவர்கள் மீது
ஏற்றிவிடாதீர்கள் …
அது சுமையாகி
அவர்கள் கனவதில்
அவை மரணித்துப்போகலாம்!
குழந்தைகளின்
மென்மையான உலகத்திற்கு
நேரம் ஒதுக்காதவர்களை
வாழ்க்கை ஒதுக்கினாலும்
வியப்பொன்றுமில்லை …
தினந்தினமும் கொண்டாட
வேண்டிய குழந்தைகளை
தினம் வைத்து
கொண்டாடும் சூழலில் நாம்!
ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல
குழந்தைகளின் சிரிப்பிலும்
இறைவனைக்காணலாம்!
கண்ணாடி போலத்தான்
அவர்களும்..அவர்கள் உலகமும்
இனி தினமும் கொண்டாடுவோம்..
பதிலுக்கு நம்மையும் கொண்டாட
அவர்கள் காத்திருக்கிறார்கள்!
குழந்தைகளோடு கொஞ்ச நேரம்
பேசிப் பாருங்கள்
நாமும் குழந்தைகளாகி
குதூகலமாகிடுவாம்…
குழந்தைத்தனம் இல்லாத
மனிதர்களே இல்லை …
இல்லாதவர்கள்
மனிதர்களே இல்லை!
