
நீரில் உவர் போல்
காற்றில் மாசு போல்
ஒளியில் வெம்மை போல்
நிலத்தில் பாலை போல்
வானில் துளைகள் போல்
நேர்ம எண்ணங்கள்
நிறைந்த மனத்திலும்
எதிர்ம எண்ணங்கள்
எப்போதாவது
இரண்டறக் கலக்கலாம்!
உவரும், மாசும்,
வெம்மையும், பாழும்
துளையும்
தம்மில் கலந்தாலும்
தன்மை கெடாமல்
நீரும், காற்றும்,
ஒளியும், நிலமும்
வானும்
தாம் தாமாகவே இருக்க
தானாய்ச் சுழலும் பூமிப்பந்து போல்…
எதிர்ம எண்ணங்கள்
எத்தனை வரினும்
எதிர்க்க வல்ல
நேர்மை இருப்பின்
நின்று சுழலும் வாழ்க்கைப் பந்து…

அருமை
அருமையான சிந்தனை
ஆஹா. அருமை