
பகடியில்லா நகைப்பில்
கூடும் மஞ்சள் ஒளி
என்னை ஊடுருவிச் செல்வதை
நீயும் பார்த்த வண்ணமிருக்கிறாய்
மின்னத் துவங்கும் இன்றிரவிற்கான
காட்சியை காணா விதமாய்
நிகழ்த்தும் விழிச்சுழற்சியின் முடிவில்
தீண்ட விழையும் விரல்களின் நுனியில்
மடல் மடலாய் அவிழும் உடல்வெளியில்
பேரெழுச்சியின் அலையெழ
மெல்ல மெல்ல
பருகிய ஒரு குவளை குளிர்நீரில்
பருவங்கள் நேர்ந்து நடமிடும்.
