பெரியவா சரணம்

நான்கு வீதியிலும் வலம் வந்து கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் வாசலில் பெண் குழந்தை ஒன்று கோலமிட்டுக் கொண்டிருந்தது..

சின்னக் காஞ்சிபுரத்தில் ஒரு நாள் விடிகாலைப் பொழுதில் கோயில் பிரதட்சணம் செய்தார் பெரியவா…

அவருடன் வந்தவர்களும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டு வந்தார்கள்..

நான்கு வீதியிலும் வலம் வந்து கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் வாசலில் பெண் குழந்தை ஒன்று கோலமிட்டுக் கொண்டிருந்தது..

அங்கே பெரியவா நின்றார்.. அக் குழந்தை கோலமிடுவதைப் பார்த்த படி நின்றார்..

பிறகு அந்தக் குழந்தையிடம், “பேஷ்! கோலம் நன்னாப் போடறே.. ஆனால் கோலம் அரிசி மாவில் தான் போடணும்.. அப்போது தான் ஈ, எறும்பு, பட்சியெல்லாம் அரிசி மாவை சாப்பிடும்.. கோலம் போட்ட உனக்கு மனசார நன்றி தெரிவிக்கும்.. சந்தோஷமா உன்னை நினைக்கும்.. இப்படி மொக்கு மாவில் கோலம் போட்டால் அது எந்த ஜந்துவுக்கும் உபயோகப்படாது இல்லையா? ” என்றார்..

இதைப் புரிந்து கொண்ட அந்தக் குழந்தை தலையை அழகாக ஆட்டி விட்டு பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தது…

பரமாச்சார்யாரின் இந்த அறிவுரை அந்தப் பெண் குழந்தைக்கு மட்டுமா? கோலம் போடும் அத்தனை பெண்மணிகளுக்கும் தான்….