வௌவால் பறந்து விட்டது/சோ. தர்மன்

என்னுடைய வீட்டின் அருகில் நகராட்சி அலுவலகமும் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையமும் இருக்கிறது.மரங்கள் அடர்ந்த அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றன.தினமும் நூற்றுக்கணக்கான பேர் நடைப்பயிற்சி செய்யும் ராமசாமி தாஸ் பூங்காவும் அருகருகே இருக்கின்றன.
இன்று காலை நடைப்பயிற்சி செய்யும் போது ஒரு மரத்தில் கைகள் எட்டும் உயரத்தில் ஒரு வௌவால் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.அருகில் சென்று பார்த்த போது உயிர் இருப்பது தெரிந்தது.நடைப்பயிற்சியை நிறுத்தி விட்டு நானும் என் நண்பர்களும் சேர்ந்து கிளையின் கூர்மையான குச்சியில் சிக்கியிருந்த அதன் இறக்கையை கிழிபடாதவாறு எடுத்து விட்டவுடன் வௌவால் பறந்து விட்டது.
இன்று காலையிலேயே அருகிவரும் இனமாக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியில் வீடு வந்து சேர்ந்தேன்.வௌவால்களால் பயங்கரமான தொற்று நோய்கள் பரவுகின்றன என்று விஞ்ஞானம் அறிவிக்கிறது.நாற்பதாண்டு காலமாக நானும் இன்னும் ஏராளமானவர்களும் வௌவால்களின் அருகிலேயே வசிக்கிறோம்.தினமும் ஓயாமல் அவைகள் எழுப்புகின்ற ஓசைகளையும் கேட்கின்றோம்.எந்த தொற்று நோயும் எங்களுக்கு வரவில்லை.