யோகி இன்றொரு சேதி -128/விசிறி ஷங்கர் 

O

லீ லோஸோவிக் யோகியின் முதல் சந்திப்பில் எண் ஏழு இடம் பெற்ற விதம் எவ்வாறு ?

O

1976 லீ யோகியை தரிசிக்க திருவண்ணாமலை வந்த போது.

இரவு தேரடி மண்டபத்தில் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

O

லீ தமது மாணவர்கள் ஐந்து பேருடன் வந்திருந்தார். எல்லோரும் யோகியிடம் தங்களை அறிமுகம் செய்த பின்னர் இறுதியாக யோகி அறிமுகம் செய்ய வேண்டிய போது You must be Lee என்றுரைத்து அட்டகாசமாக சிரித்தார் யோகி

O

லீயை தமக்கு நெருக்கமாக… மிக நெருக்கமாக தரையில் தட்டி தட்டி வெகு அருகில் அமர வைத்தார் யோகி. அதை ஒரு விளையாட்டாக யோகி ஆனந்தம் பொங்க நிகழ்த்தினார். லீ வெட்கப்படும் அளவிற்கு அது இருந்தது.

O

லீயிடம் தீப்பட்டியைக் கொடுத்து தமது சிகரெட்டை பற்ற வைக்கச் செய்தார். தமக்கு எவ்வளவு வயதிருக்கும் என்று லீயிடம் கேட்க, காலத்தை வென்று நிற்கும் ஞானியின் வயதை நாம் எப்படி தீர்மானிப்பது என்ற தெளிவோடு No idea என்று லீ கூற யோகி அட்டகாசமாக சிரித்துள்ளார்.

O

அந்த முதல் சந்திப்பில் உரையாடலோடு மொத்தம் ஏழு சிகரெட்களை யோகி புகைத்துள்ளார். ஏழு முறையும் லீயை பற்ற வைக்கச் செய்துள்ளார்.

O

இந்த எண் ஏழு குறித்து லீயும் கவனித்துள்ளார் யோக சாஸ்திரம் குறிப்பிடும் ஏழு சக்கரங்களோடு லீ இதை ஒப்பிட்டுள்ளார். திருமதி ஹில்டா அர்கள் குறிப்பிட்டபடி, கர்மவினைகளை எரிக்கும் செயலாகவே யோகியின் புகைபிடித்தல் நிகழ்வதாகக் கருதினார்.

O

ஏழு சிகரெட்களை யோகி புகைத்ததையும், ஏழு முறையும் லீயையே பற்ற வைக்கச் செய்ததையும் அவர் வியப்புடன்

கவனித்துள்ளார்.

O

ஏழு என்னும் தெய்வீக கணக்கு லீ யோகி முதல் சந்திப்பிலும் அரங்கேறியுள்ளதைக் காண்கிறோம் !

O

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜயகுரு ராயா

May be an image of 2 people, beard and people sitting

19You and 18 others

7 Comments

1 Share

Like

Comment

Share