மூன்று எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள்/அழகியசிங்கர்




சமீபத்தில் பார்த்த  ஆவணப்படம் 'கிணற்றில் விழுந்த நிலவு' என்ற தலைப்பில்  எஸ்.வைதீஸ்வரன் பற்றிய ஆவணப்படம்.  வைதீஸ்வரனும் அவர் மனைவியும் இன்னும் சில நாட்களில் ஆஸ்திரியா“கிளம்பிப் போகிறார்கள்.  இந்தத் தருணத்தில் அவருடைய ஆவணப்படம் வெளிவந்தது சிறப்பு. அதே போல் அசோகமித்திரன், ஞானக் கூத்தனின் ஆவணப்படங்கள் வைதீஸ்வரனின் ஆவணப்படத்துடன் முக்கியமான கவனத்தைப் பெறுகின்றன. 

அவர் பிறந்த தினத்தின்போது குவிகம் ஒரு விழா எடுத்து அவருடைய ஆவணப்படத்தை ஒளி பரப்பினார்கள்.  இப்போது வலைத்தளத்தில் அந்த ஆவணப்படம் 

இம்மாதிரியான ஆவணப்படங்களில் ஒரு பொதுவான 

தன்மை இருக்கும். யார் பேரில் ஆவணப்படம் எடுக்கப்படுகிறதோ அவரைச் சுற்றி அவருக்குப் பழக்கமான நண்பர்களைப் பேசச் சொல்வார்கள்.

'கிணற்றில் விழுந்த நிலவு' என்ற ஆவணப்படத்தில் வைதீஸ்வரனின் முழு ஆளுமை வெளிப்படுகிறது. 

வைதீஸ்வரன் ஒரு கவிஞர், ஒரு ஓவியர், நாடக நடிகர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என்று இப்படிப் பன்முக ஆளுமை உடையவர். அதை இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகக் காட்டப் படுகிறது.

இசையில் இவர் இயற்றிய பாடல் வரிகள் காட்டப் படுகிறது.  குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி. 

உங்கள் கவிதை எப்படிப் பிறக்கப் படுகின்றன என்ற கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்கிறார் வைதீஸ்வரன்.  கூடவே ஒரு கவிதையைப்படிக்கிறார்.  ஒருவருடைய மானசீக உணர்வுதான் கவிதை என்கிறார் வைதீஸ்வரன்.

கூடவே, ஆர்.ராஜகோபாலன்,  வைதீஸ்வரன் கவிதைகள் புதுக்குரலில் இடம் பெற்றிருப்பது முக்கியமான விஷயமாகக் கூறுகிறார்.
ஆர்.ராஜகோபலன், அழகியசிங்கர், வெளி ரங்கராஜன், பாரவி, இந்திரன், எல்லோரும் வைதீஸ்வரன் கவிதைகளைக் குறித்துப் பேசுகிறார்கள்.  மாலன் நகரத்தைப் பற்றி வைதீஸ்வரன் பார்வையை விளக்குகிறார், விட்டல்ராவ், அம்ஷன் குமார், அவர் கவிதைகளைப்  பற்றிப் பேசுகிறார்கள்.வத்சலா 'மைலாய் வீதி' என்ற அவருடைய கவிதையை உணர்ச்சிப் பூர்வமாய் வாசிக்கிறார்.  பாவண்ணன், அவருடைய ஒரு கவிதையை எடுத்துப் பேசுகிறார்.  கிருஷாங்கினி வைதீஸ்வரனின் ஓவியத்தைப் பற்றிப் பேசுகிறார். சண்முகம் வித்தியாசமான பார்வையை அவருடைய புதுக்கவிதை குறித்துப் பேசுகிறார். லதா ராமகிருஷ்ணன் அவர் கவிதைகள் குறித்து வேற பார்வையை வெளிப்படுத்துகிறார்.  சக ஓவியரான நாகராஜன் வைதீஸ்வரனை ஓவியராகக் குறிப்பிடுகிறார். திரும்பவும் விட்டல்ராவ் அவருடைய ஓவியத்தைப் பற்றிப் பேசுகிறார். இரா முருகன் அவர் ஓவியத்தைப் பற்றிப் பேசுகிறார்.  ஆக மொத்தம் முழு நிறைவைத் தரக்கூடிய ஆவணப்படம் இது.  இதைச் சிறப்பான முறையில் இயக்கியிருப்பவர் நிழல் ப.திருநாவுக்கரசு. அவர்  பாராட்டுக்குரியவர் ..  துணிச்சலாக இந்த முயற்சியைச் செய்த குவிகத்திற்கு வாழ்த்துகள்.