கற்பனையாய்’சேவல் வால்'(Cocktail)/க நா சு

அரசமரம் சுற்றி வந்து
அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கும்
பாவனையாய்

கண்களை மூடிக் கொண்டு
அஸ்தமித்து விட்டது என்றெண்ணும்
போக்காய்

நூல்களிரண்டைப் படித்து முடித்துவிட்டு
அறிவெல்லாம் பெற்று விட்ட

கையில் ‘சேவல் வால்’ கிளுகிளுக்க
செவிவழி ஞானமெல்லாம் கிட்டிவிட்ட
வேகத்துடன்

‘அறிவாளி நான்’ என்று பேசும்
அறிவாளியை டெல்லிமா நகரிலே
காணலாம் – காண்.

One Comment on “கற்பனையாய்’சேவல் வால்'(Cocktail)/க நா சு”

Comments are closed.