உயிர்/
மதுவந்தி


அடுக்குமாடி குடியிருப்பின்
நுழைவாசல் எல்லாமே
ஒரே மாதிரிதான் தோன்றும்.

மின்தூக்கியின் மௌனமான
இரும்புக் கதவுகள்.
தீயணைக்கும் கருவி,
அறிவிப்பு பலகை,

சுத்தமான, சுவையற்ற,
வசதியான, உயிரற்ற
ஒழுங்கான, இறுக்கமான இடம்.
நுழைந்து யோசியாமல்
கடந்து போகிற இடம்.

அலுவலகம் முடிந்து திரும்பிய
மாலையில், உள்ளே வந்ததும்
கண்ணில் பட்டு
கவனத்தை ஈர்த்தது
மூலையில் வைத்த செடியொன்று.

நிழல் நேசிக்கும் செடி
இலைக் கரங்களைசைத்து
நிற்க வைத்தது.

உயிர் உயிரின் மீது
கொள்ளும் ஈர்ப்பு வலியது.

One Comment on “உயிர்/
மதுவந்தி”

Comments are closed.