மூன்று கவிதைகள்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

இன்று (18.11.2022 ) விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டத்தில்,’சிட்டுக்கு’ கவிதைத் தொகுப்பிலிருந்து வாசித்தது.

  1. பறவைக் கூடு.

பனி தூங்கும் இலையில்
கூடு தைத்து,
குஞ்சுகளை வைத்து
இரை தேடி
வந்து, ஊட்டும் வானம்பாடி.
நீ
விளையாட பறவைக் கூட்டில்
கை
வைக்கலாகுமோ தம்பி.

  1. விமானம்.

ஆகாயத்தில் பறக்கும்
விமானம்
பறவை தந்த வெகுமதி.
அறிவியலின்
அற்புதம், மனித குலம்
மாண்புற
இருவரின் மொத்த
உழைப்பு.
சமூகம்
பயனுற நீயும் கடன்பட்டவனே.

  1. வண்ணப் புறா.

வண்ணப் புறா பார்.சின்னச்
சின்ன
மணிவிழிகள்,வாழைமடல்
உடல்.
இருக்கும் இடத்தின் சூழலால்
உணவும்
நிறமும் மாறுது. குணம்
மட்டும்
மாறாது. எங்கே இருந்தால்
என்ன?
நல்ல பண்பில் மிளிருவாய்.