
மழையில் குளித்து வெயிலில் வெடித்து
முறைத்துப் பார்க்கும் சிலையே – உன்
நிலையில் இருந்து பழைய கதையை
நினைத்துப் பார்த்தேன் மலையே
பாறைக் கல்லாய் இருந்த காலம்
வெடித்துச் சிதறி விழுந்த கோலம்
பெற்ற மலையை விட்டுப் பிரிந்து
பெரிய லாரியில் விழுந்து சரிந்து
சிற்பியின் உளியில் வாங்கிய வலிகள்
செதுக்கிய பின்னர் சேர்ந்த உருவம்
வாங்கிப் போன தொண்டர் கூட்டம்
வாழ்த்துப் பாடி விழுந்த மாலைகள்
கழுவிக் காத்த கரங்கள் சிலநாள்
காரில் வந்து பார்த்தவர் சிலபேர்
பொழுதும் போனது நாட்கள் ஓடின
போட்டிச் சண்டையில் சிலையினை மறந்தனர்
காக்கைகள் கூடிடும் கழிப்பிடம் ஆனது
காற்றிலும் வெயிலிலும் காய்ந்து போனது
ஏக்கமும் எண்ணமும் மலையினில் துடிக்குது
எங்கோ தூரத்தில்
இன்னமும் வெடிக்குது

பரிணாம வளர்ச்சி