
18/11/22 கவிதை நேசிப்பு அமர்வில் வாசித்த கவிதை
நம் கணக்கு நமக்கு
நல்லவர்கள் நாம்
நாம் சொன்னால் கேட்பவர்கள்
யாரெல்லாம் போடுங்கள்
கணக்கு
கிட்டுமா விடை.
எதற்குக் கிட்டியது விடை
ஓட்டுப் போடுகிறோம்
ஒத்துக்கொள்வோமா
முற்றாய்
இல்லை இல்லை
இல்லவே இல்லை
நாமும் வேறு
நம்மைச்சுற்றி உள்ளோரும்
வேறு
வேறு வேறாய் தெரிவதே அழகு
வெறுப்பை உமிழ்வது தவறு
மன ஆடியைத் துடையுங்கள்
வசப்படலாமொரு சூக்குமம்.
