ஆதவன்/கலாவதி பாஸ்கரன்

அதிகாலை கிழக்கில்
அழகாக உதிப்பாய்
உலக மாந்தர் தம்
அலுவல்களைத் துவக்குவாய்
உச்சியில் மேலேறி
உஷ்ணத்தைக் கக்குவாய்
அனைத்து இடங்களிலும்
மிகுதி நீரினை உறிஞ்சி
தூய்மை செய்வாய்
மயக்கும் மாலைப் பொழுதினில்
மேற்கில் மறைவாய்
நீ இருக்கும் போது இருந்த
மனதிடம், தைரியம், தெளிவு
எல்லாம் நீ மறைந்து
இரவில் இருள் சூழும்போது
எங்குதான் சென்றன?
பயமும், பீதியும் கவ்வ
அனைத்து உயிரினங்களும்
அவரவர் இடத்தில் அடங்குகின்றன,
நீ மறுபடி அதிகாலை உதிப்பாய்
எனும் நம்பிக்கையுடன்!
எங்களுடைய வாழ்வில்
அனுதினமும் பயணித்து
அருள் செய்யும் அருணனே,
ஆதவனே, சூரியனே
உன்னைப் போற்றி வணங்குகிறேன்.

4 Comments on “ஆதவன்/கலாவதி பாஸ்கரன்”

  1. அழகான கவிதையில் ஒரு சூரிய நமஸ்காரம். ஆதவனே! மறுபடி நீ உதிப்பாய் என்ற நம்பிக்கையுடன் உறங்கச் செல்லும் உயிர்கள் என்ற கருத்து சிறப்பு
    எனது வாழ்த்துகள்.

Comments are closed.