மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2/ 160/அழகியசிங்கர்  

பூத்தொடுத்தல்

உமா மஹேஸ்வரி 

இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்
ஒருவேளை,
என் மனமே நூலாகும்
நுண்மையுற்றாலொழிய

நன்றி : வெறும் பொழுது – உமா மகேஸ்வரி  – தமிழினி  பதிப்பகம் – பக்கங்கள் : 220 : விலை : ரூ.100. 

.