
நாதனுள்ளிருப்பதாக எண்ணி
ஏமாந்துவிட்டோம்.
பற்றெலாம் அறுத்தான் நம்
பற்றறுப்பான் என்று நினைத்து
மோசம் போனோம்.
பற்றெலாம் அறுத்துவிட்டுப்
பற்றத் தம்மேல் கொள்ளச் சொல்லும்
நாரணனும் இரணியனும்
ஒன்றுதான் கண்டோம்.
மார்க்ஸனும் மனுவும்
கண்டு சொன்னதும்
குருட்டுவழி தானோ?
புத்தனும் ஏதுவும் வாக்களித்த
லக்ஷ்யமும் எங்கே, எங்கே?
