பொழிதலும் பிழிதலும் /எஸ் வி வேணுகோபாலன்

கொட்டித் தீர்க்கும் என்று
சொல்லப்பட்டிருந்த நாளில்
மொட்டை வெயில் காய்ந்தது வானம்
படையெடுத்துப் போன குடைகள் யாவும்
இரையுண்ணாது திரும்பி
இல்லங்கள் வந்தடைந்தன.

இரவு கதவை அடைக்கையில்
ஏதோ நினைப்பில்
வாசல் கொடியிலிருந்து
முன்னெச்சரிக்கையாக எடுத்துவர மறந்த
துணிகளையெல்லாம்
காலை
அதிர்ச்சியோடு எடுத்துப் பிழிகிறேன்
மேகப் பொதிகளைப் போல்!

5 Comments on “பொழிதலும் பிழிதலும் /எஸ் வி வேணுகோபாலன்”

  1. படயெடுத்த குடைகளைப் பிடிக்காத
    மேகப்பொதிகள்
    பிழிகின்றன
    கருணை மழையை
    காய்ந்து கிடக்கும்
    துணிகளின் மேல்!

  2. இரையுண்ணாத குடைகளும் பிழியப்படும் மேகப்பொதியாக துணிகளும் எதிர்பாராத அழகான ஓவியங்கள்.

Comments are closed.