
\
காடுகள் இயற்கை வழங்கிய கொடை, வன விலங்குகளுக்கானது. உலகில்
தற்போது புவியின் வெப்ப நிலை உயர்ந்ததற்க்கு காரணம் காடுகள்
அதிகமாக அழிக்கப்பட்டது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த
ஐந்தாண்டு காலத்தில் காடுகள், வனஉயிர்கள், கடற்கரைகள் மிக பெரிய
பாதிப்புக்குள்ளாயின.
காடுகளில் ஒரு பெரிய மரம் வீழ்ந்ததென்றால் அடுத்த இரண்டு அல்லது
மூன்று மாதங்களில் அங்கு வேறொரு மரம் அதன் இடத்தை
பிடித்திருக்கும்.
காடுகளில் யாரும் மரத்தை நட்டுவிட்டு செல்வதில்லை. மனிதன்
அங்கு வராததால் அவை எந்த ஒரு தடையும் இல்லாமல் விரைவில்
வளர்ச்சியடைகின்றன.
நாம் ஒரு விஷயத்தை உற்று கவனித்தால் புரியும். ஒரு பெரிய
மரத்தின் கீழ் 15 முதல் 20 சிறிய மரங்கள் வளர்ந்து வரும். அந்த மரங்கள்
சூரிய ஒளியை எட்டிப்பிடிக்க எத்தனிக்கும். ஆனால் பெரிய மரத்தின் கீழ்
உள்ள அவைகளால் சூரிய ஒளியை நேரடியாக பெற முடியாது. ஆனால்
அவை தொடர்ந்து காத்திருக்கும், நாள் கணக்கில் அல்ல வருடக்கணக்கில்
காத்திருக்கும். பெரிய மரம் ஒன்று வீழ்கையில் அந்த சிறிய
மரங்களுக்குள் பெரிய போட்டி ஒன்று நடக்கும். எது உச்சியை உயர்த்தி
சூரிய ஒளியை பெறுகிறதோ அது பெரிய மரமாக தன் கிளைகளை பரப்பும்.
இந்தியாவின் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட்டு
பல்வேறு நிறுவனங்களால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில்
மரங்கள் அழிக்கபட்டு வருகின்றன.
எதற்காக அழிக்கபடுகிறது காட்டு நிலங்கள்?
சாலைகள், மின்சார இணைப்பு, ரயில் பாதையமைக்க, குழாய்கள்
அமைத்தல்.
நம் நாட்டிலுள்ள சுமார் நான்கு கோடி ஆதிவாசிகள் பாதிப்பேர் தங்கள்
உணவுக்காக காடுகளையே நம்பியுள்ளனர். இலுப்பை போன்ற சுமார் நூறு
வகை மரங்கள் இவர்களது தேவையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பூர்த்தி
செய்து வருகின்றன.
“பசியாறுவதற்க்கு உணவை உண்ணுங்கள், தாக்கத்தை தணிபதற்க்கு நீரை
அருந்துங்கள். ஒரு பூவின் அமைப்பையும் நறுமணத்தையும் அழிக்காமல்
பூவிலிருந்து தேனைச் சுவைக்கும் வண்ணத்துப் பூச்சியைப் போல்
வாழ்க்கையின் அடிபடை தேவைகளை நுகருங்கள்”. – புத்தர்.

காடுகள் நாட்டின் செல்வங்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். என்ற குறளில் காடும் ஓர் அரணாக விளங்கியது. ஆனால் பிறகு காட்டை அழித்து நாடாக ஆக்கினர். கரிகாற் சோழன் காடு கெடுத்து நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கினான் என்று கூறப்படுகிறது