இனிக்கும் தமிழ் – 161/டி வி ராதாகிருஷ்ணன்

நாலாயிர திவ்ய பிரபந்தம்

கடவுளைக் கண்டேன்
பேயாழ்வார் கடவுளைக் கண்டாராம்
ஒரு முறை அல்ல ஐந்து முறை…

பாடலில் அவர் சொல்வதைப் பாருங்கள்

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு
மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்*
என்னாழி வண்ணன்பா லின்

திருக்கண்டேன் – மஹா லக்ஷ்மியை கண்டேன்
பொன்மேனி கண்டேன்- பொன் போல் ஜொலிக்கும் மேனியை கண்டேன்
திகழு மருக்கனணிநிறமுங் கண்டேன்- சூரியனைப் போல் ஒளி விடும் நிறத்தைப் பார்த்தேன்

செருக்கிளரும் -. யுத்தத்திற்கு கிளர்ந்து வரும்
பொன்னாழி கண்டேன் – சக்ராயுதம் கண்டேன்
புரிசங்கங் கைக்கண்டேன் – கையில் சங்கு இருப்பதை கண்டேன்
என்னாழி வண்ணன்பா லின் – கடல் வண்ணமாய் இருக்கும் அவனிடத்தில்

                   -