
ஏனோ தெரியவில்லை இரண்டு நாட்களாக மனிதர்களை சந்
ஏனோ தெரியவில்லை இரண்டு நாட்களாக மனிதர்களை சந்திக்கவில்லை. சில தினங்களுக்கு முன் தெரு நாய் (இதை மரியாதையாக குறிப்பிடுகிறேன். சரியான பதம் இல்லை) ஆறு குட்டிகளை ஈன்றது. தாய் நாய் வற்றி இளைத்துப் போய் பிள்ளைகளுக்கு பால் குடுக்க சக்தியில்லாமல் இருந்தது. அந்த குட்டிகள் கதறியது என்னை நிலைகுலைய வைத்தது. மேல்நோக்கி கடவுளை சபித்தேன். Blue Cross ம் சரியான ஆலோசனை வழங்கவில்லை. (ரிடையர்ட் ஆன சினிமா நடிகைகள் பணியாற்றும் நிறுவனங்கள் மேல் மரியாதை இல்லை. இருந்த போதிலும் பெசண்ட் நகர் Blue Cross மருத்துவமனை சிறப்பான சேவை வழங்குகிறது என அறிகிறேன்). பசியால் துடிக்கும் குழந்தைகளை பார்க்க சகிக்க முடியவில்லை. நேற்று வரை அம்மாவிடம் பால் குடிக்க தீர்மானமாக இருந்த குழந்தைகள் வேறு வழியின்றி இன்று மாலை ஆவின் பாலை பறிமாறினோம். குழந்தைகள் பாலை அருந்தியப் பிறகு மனம் நிம்மதி அடைந்தது. இதில் வியப்பூட்டும் விஷயம் நடந்தது. தாய்ப்பால் கிட்டாத குழந்தைகளை அவ்வபோது காக்கைகள் பறந்து வந்து குட்டிகளிடம் பேசின. திரியும் ஆட்டுக்குட்டிகள் குழந்தைகளிடம் ஏதோ பேசியதை ஊகிக்க முடிந்தது. திரியும் இன்னும் பல நாய்கள் குட்டிகளை முகர்ந்து சமிக்ஞயை மெல்லிய குரலில் வெளிப்படுத்தின. இப்போது தாயும் சேயும் நலம். சுற்றத்தில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதி..குட்டிகளை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுதல். மற்றொரு சம்பவமும் கண்கலங்க வைத்தது. பாண்டி லஷ்மி யானை 35 வயதில் அகாலமாக மரணம் அடைந்ததும் இம்சையாக இருக்கிறது. லஷ்மியை கவுரமாக வழியனுப்பிய விதம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தியது. தமிழ் உளவியலில் அஃறிணைக்கு பெரும் மரியாதை உண்டு. பைரவரும், கஜேந்திரரும் வெறும் அஃறிணைகள் இல்லை…
