ஆர்.வெங்கடேஷின்.பெருங் கூட்டத்தில் ஒருவன்../மீனாட்சி சுந்தரமூர்த்தி


கல்கியில் 2. 4. 95 இல் வெளியான கதை
கதைச்சுருக்கம்.:
பிரபல எழுத்தாளர் பத்ரி நாராயணன் இறப்பிற்கு பத்ரியின் நண்பரும் அதிகம் அறியப்படாத எழுத்தாளருமான உத்தண்டராமனிடம் இரங்கல் செய்தி புல்ஸ்கேல் பேப்பரில் இரண்டு பக்கத்திற்கு எழுதி வாங்கி வர ஒரு பிரபல பத்திரிகையின் நிருபர் கணேஷ் அனுப்பப்படுகிறார்.
அவர் சிட்லபாக்கம் சென்று அவரைச் சந்தித்து தகவல் சொல்லி எழுதி வைக்கச் விட்டு மறுநாள் சென்று வாங்கி வருகிறார்.
ஆனால் வெள்ளிக்கிழமை வெளியான அந்த இதழில் இந்த இரங்கலுக்காக ஒதுக்கியிருந்த இடத்தில் பெருங் கூட்டத்தில்
ஒருவன் என்ற தலைப்பிட்ட விளம்பரம்தான் இடம்பெறுகிறது.

இந்த கதையை
எழுத்தாளர் நிருபர், பத்திரிகை என முப்பரிமாணமாகப் பார்க்கலாம்.

1.உத்தண்டராமன் இரங்கல் செய்தி எழுதித் தருகிறார்.
2.நிருபர் கணேஷ் அரும்பாடுபட்டு அதனை வாங்கி வருகிறார்.

  1. வியாபார நோக்கில் நடைபோடும் பத்திரிகை அதனை வெளியிடாமல். போவது.

எழுத்தாளர் எனப் பார்க்கும் போது இரண்டு விதமான மனப்போக்கு கொண்ட எழுத்தாளர்கள்.
பத்ரி தன் எழுத்து புகழ்பெற வேண்டுமென
நினைப்பவர்.
எழுதுவது தனக்கானது மட்டுமே பொதுவெளியில் விடுவது வணிக நோக்கு என்பவர் உத்தண்ட ராமன்.
பிரபலமானபின் சாதித்தது ஏதுமில்லை எல்லாம் ஒரு மாயை என்று உணர்கிறார் பத்ரி.
உத்தண்ட ராமரும் எழுதுவது தனக்கானது
என்றதும் விதண்டா வாதம் . என்று அறிகிறார்.
இருவரும் இனி எழுதுவதையே விட்டு விடலாம் என முடிவு செய்கின்றனர்.
இவர்களன்றி கலாநேசன் என்றொரு எழுத்தாளர் உண்மையின்றியே வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் எழுதுபவரும் சொல்லப்படுகிறார்.

பத்ரி கனடா மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சென்று வரும் பேராசிரியர் ஆறேழு கவிதைத் தொகுதிகள். சுயசரிதம் எழுதியவர்.இவரின் ஜனரஞ்சகமான நடை ,அனுபவங்களைச் சிந்தாமல் சுவைபடச. சொல்லும் நேர்த்தி
படிப்பவரை கவரும்.

உத்தண்டராமன் இரண்டே கவிதைத் தொகுதிகள் ஒன்று 40 பக்கம்,
ஒன்று 56 பக்கம். புத்துணர்ச்சி தருவது ஒவ்வொன்றும் இறுதியில் ஒரு சிக்கலொடு முடிந்து புது விஷயங்களை யோசிக்க வைக்கும் முதல் தொகுதி தீட்சண்யம் மிக்கது என விமர்சகர் பெருங்கோட்டு வேலன் சொல்லியுள்ளார் ஆனால் அதைத் தான் படிக்கவில்லை என்கிறார் கணேஷ்.

பெருங்கூட்டத்தில் ஒருவன் தலைப்பு மிகப் பொருத்தம்.
1.இரங்கல் செய்தி வெளிவராத்தால் :
இறந்த எழுத்தாளர் :பத்ரி பெருங்கூட்டத்தில் ஒருவனாய் கரைந்து போகிறார்.,

  1. நினைவுகளை மீட்டெடுத்து அதில் அமிழ்ந்து இரங்கல் எழுதி இரண்டு போட்டோக்களையும் தேடித். தந்த உத்தண்டராமனும் பெருங்கூட்டத்தில.் ஒருவனாய் விடப்படுகிறார்.
  2. கணேஷ் பெருமுயற்சி எடுத்தும் பயனின்றி இப்படி எத்தனையோ பேரின் உழைப்பு அங்கீகாரம் இழந்து போவதன் அடையாளமாய் பெருங்கூட்டத்தில்
    ஒருவனாய் ஆகிறார்.

சமூகச் சிந்தனைகள்.
நகர வாசத்தில் மரஞ்செடி கொடிகளை
அறியாது போகும் மக்களும் உள்ளதை
‘சைதாப் பேட்டையிலிருந்து தி. நகர் போய் படித்தவனுக்கு பஸ் தெரியும், லாரி தெரியும், கொய்யாவா தெரியும்.’ என்று காட்டுகிறார்.

ஏரியை தூர்த்து வீடுகளாக்கியது பகிரப்படுகிறது வருத்தமாக.

எளிய நடையில் அருமையான ஒரு கதையைத் தந்துள்ளார் கதாசிரியர்.