ஃபுயெண்டெஸின் “Inez”/எம்.டி .முத்துகுமரசாமி

ஃபுயெண்டெஸின் “Inez” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கவித்துவமும் கதையாடல் முறையும் தமிழுக்கு அறிமுகமாகும். இறந்தால் வெனிஸ் நகரத்தில் இறக்கவேண்டும் ஏனென்றால் அங்கேதான் காதலின் மடியில் சாகலாம் என்ற உலகளாவிய ‘முதுமொழி’ உருவாவதற்கு காரணமான தாமஸ் மன்னின் நாவல் “Death in Venice” இன் பாதிப்பில் ஃப்யுண்டெஸ் எழுதிய நாவல் “இனெஸ்”. தூய கன்னி என்ற பொருளுடைய கிரேக்க தேவதையை நினைவுபடுத்தும் ‘இனெஸ்’ என்ற பெயரில் அமைந்த நாவல் வெனிஸில் நடக்கும் காதலையும் துரோகத்தையும் பற்றிய கதை. இரண்டு இசைக்கலைஞர்களுக்கிடையே உள்ள தொழில் போட்டி, காதல் ஆகியவற்றை கருவாகக்கொண்ட “இனெஸ்” லாசராவின் உரைநடைக்கு நிகரான உணர்ச்சியையும் வேகத்தையும் கவித்துவத்தையும் வெளிப்படுத்துவது. தாமஸ் மன்னின் நாவலின் பாதிப்பில் உருவானதே சால்மான் ருஷ்டியின் “Enchantress of Florence”, Kazuo Ishiguro வின் “The Unconsoled” ஆகிய நாவல்களும் ஆனால் ஃபுயெண்டெஸே இந்த காதல் கதையை புதிய உயர்தளத்திற்கு எடுத்துச் செல்கிறார். வழக்கம்போல ஏராளமான நாட்டுப்புற கதைகளையும் புராணங்களையும் கார்லோஸ் ஃபுயெண்டெஸ் நாவலுக்குள் பயன்படுத்துவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் நாவலின் apocalyptic vision ஒவ்வொரு வாக்கியத்திலும் வெளிப்படுவது.

Excerpt From: Carlos Fuentes. “Inez: A Novel.”
“Cry out, cry out with terror, howl like a hurricane, moan like the deepest forest, let rocks crash down and torrents roar, cry out with fear because in this instant you see black horses racing through the skies, bells fall silent, the sun is obscured, dogs are baying, the devil has taken over the world, skeletons have come out of their tombs to hail the passing of the inky steeds of damnation. It’s raining blood from the heavens! The horses are as swift as thought, as unexpected as death, they are the beast that has pursued us forever, since the cradle, the ghost that knocks at our door at night, the invisible creature that scratches at our windowpane; cry out, all of you—as if your life depended on those cries!—HELP; pray to the Virgin Mary for mercy, you know in your hearts that she can’t save you, that no one can save you, you are damned, the beast is pursuing us, it’s raining blood, the wings of nocturnal birds are beating in our faces, Mephistopheles has poisoned the world, and you’re singing as if you were in the chorus of a Gilbert and Sullivan operetta! Think what[…]”